நடிப்பு, தயாரிப்பை தாண்டி புது அவதாரம் எடுக்கும் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்

Actress Nayanthara : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும் படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. ஆனாலும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல படங்களில் இப்போது கமிட்டாகி இருக்கிறார். இப்போது அவரது லைன் அப்பில் 6 படங்கள் இருக்கிறது.

இதுதவிர நயன்தாரா மற்ற தொழில்கள் மூலமும் அதிக முதலீடு செய்து வருகிறார். ஒருபுறம் நடிப்பு, தயாரிப்பு என கோடிகளை குவித்து வருகிறார். தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அதிக படங்கள் தயாரித்து வருகிறார்.

இந்த சூழலில் நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கேமரா முன் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இது புதிய தொடக்கம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆகையால் நயன்தாரா இயக்குனராக அவதாரம் எடுக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.

ஆனால் இப்போது யோகி பாபு உடன் மீண்டும் கூட்டணி போட்ட நயன்தாரா மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா இயக்குனராக வாய்ப்பு குறைவு தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நடிப்பு, தயாரிப்பை தாண்டி புது அவதாரம் எடுக்கும் நயன்தாரா

nayanthara
nayanthara