வாரிசு படம் வெளியாகி பலதரப்பட்ட கருத்துக்களை கூறி வந்த நிலையிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது என பட குழு சார்பாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் படம் வெளியாவதற்கு முன்னரே தேவையில்லாத கருத்துக்களை பேசி தமிழ்நாட்டில் பல பிரச்சனைகளையும் குழப்பங்களையும் கொண்டு வந்தனர்.
படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே விஜயை நம்பர் ஒன் என கூறி வந்தார். இது தவறு என சுட்டிக்காட்ட பிறகும் விடாமல் அதை கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் அவருக்கு எதிராகவும் விஜய் படத்திற்கு எதிராகவும் பல கருத்துக்களை முன்மொழிந்து வந்தனர்.
தற்பொழுது படம் வெளியாகி வெற்றி பெற்றாலும் படம் சீரியல் மாதிரி இருக்கிறது இது ஒரு தோல்வி படம் என கூறி வருகின்றனர். இதனை கேட்ட படத்தின் இயக்குனர் வம்சி கோபப்பட்டு அது எப்படி இப்படி சொல்லலாம் நாங்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்து வருகிறோம் இந்த படத்தின் பெரிய நடிகர் விஜய் பல தியாகங்களை செய்து நடித்திருக்கிறார். படத்தில் நிறைய மனிதர்கள் கஷ்டப்பட்டு உழைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படி கூறுவது தவறு என கூறியிருக்கிறார்.
இதே மாதிரி எச்.வினோத் அனைவரும் உழைப்பாளிகள் தான் அனைவரும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் சினிமாவில் மட்டும் உழைக்கவில்லை சினிமாவில் உழைத்தால் அனைத்தும் கிடைத்து விடுகிறது. ஆனால் வெளியில் வேலை செய்யும் ஒவ்வொரு மனிதர்களும் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்கள் அதனால் அவர்களுடன் சினிமாவை ஒப்பிட கூடாது எனக் கூறியிருக்கிறார்.
இதேபோல் லோகேஷ் கனகராஜ் சினிமாவில் கஷ்டப்பட்டால் கோடிகளிலும், லட்சங்களிலும் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வெளியில் கஷ்டப்படும் மனிதர்கள் வெறும் 1000 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் கஷ்டப்பட்டு சம்பாதித்து அந்த பணத்திலிருந்து
படத்தை பார்க்க ஒரு 300 ரூபாய் செலவு செய்கிறார்களே அவர்களே சிறந்தவர்கள் உழைப்பாளிகள் என தெளிவாக கூறியிருக்கிறார்.
வேறு மாநிலத்தவர்கள் விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க தேவையில்லாத பேச்சுகளை பேசி தற்பொழுது தோல்வி என தெரிந்ததும் மறுபடியும் தேவையில்லாத விஷயங்களை பேசி வருகின்றனர். என்னதான் படம் வெற்றி, தோல்வி அடைந்தாலும் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் மிகவும் பொறுப்புடன் பேசி வருவது பாராட்டத்தக்கது. வேறு மாநிலத்தவர்கள் உள்ள இயக்குனர் இப்படி பேசுவதற்கு முக்கிய காரணம் பணம் மற்றும் அந்த படத்தில் நடித்த நடிகர்கள் கேள்வி கேட்காமல் இருப்பது. இதை எந்த நடிகர்களும் அனுமதிக்க கூடாது.