5000 கொடுத்து 5 கோடியை ஆட்டைய போட்டாரா தளபதி.? அரசியல் பிசினஸுக்கு நெட்டிசன்கள் பதிலடி

Actor vijay: அண்மை காலமாக சோசியல் மீடியாவை திறந்தாலே விஜய் பற்றிய செய்திகள் தான் வந்து விழுகிறது. லியோ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கும் இவர் இப்போது தன்னுடைய அரசியல் நகர்வுக்கான வேலையையும் சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்.

இதுவே இந்த பரபரப்புக்கு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தார். அதன்படி 234 தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சென்னைக்கு வருவதிலிருந்து தங்குவது, சாப்பாடு என அனைத்து வேலைகளையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொறுப்போடு செய்து முடித்தனர்.

அந்த வகையில் இந்த நிகழ்வும் சிறப்பாக நடந்து முடிந்ததோடு மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் விஜய் தொகுதி வாரியாக முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கினார்.

இதை வைத்து பார்க்கும் பொழுது மொத்தமாக அவர் 2.35 கோடி வரை இதற்காக செலவழித்திருக்கிறார். இதை தவிர்த்து வந்தவர்கள் பாதுகாப்போடு திரும்பிச் செல்லும் வரை தேவையான செலவுகளையும் அவரே செய்திருக்கிறார். இது ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் கவர்ந்துள்ளது. அதிலும் மேடையில் அவர் நடந்து கொண்ட பண்பும், பேசிய பேச்சும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் விஜய் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை பக்காவாக ஆரம்பித்திருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் இப்போது கதி கலங்கி போயிருக்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும் சிலர் இதை நெகட்டிவ் ஆகவும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.

bismi-tweet-vijay
bismi-tweet-vijay

அதில் விஜய் ஐந்தாயிரம் கொடுத்து ஐந்து கோடி மதிப்பிற்கான விளம்பரம் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் விஜய்க்கு ஆதரவாக பொங்கி எழுந்துள்ளனர். மேலும் ஒரு நாள் முழுவதும் மேடையில் நின்று கொண்டே பரிசுகளை வழங்கிய தளபதி எங்கே விளம்பரத்திற்காக கண்டதையும் உளறும் நீங்கள் எங்கே என பிஸ்மியையும் வறுத்து எடுத்து வருகின்றனர்.