இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷின் கேஜிஎப் 2 திரைப்படம் பான் இந்திய படமாக வெளியாகி 1200 கோடி வசூலை வாரி குவித்தது. இதன்பிறகு பிரபாஸை வைத்து பிரசாந்த் நீல் இயக்கும் படம் சலார். இந்த படம் பயங்கர அடிதடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் 300 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்தில் நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் முதன்முதலாக பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிருத்விராஜின் பிறந்த நாளான இன்று, சலார் படத்தில் அவர் இருக்கும் கெட்டப்டபின் போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் பிருத்திவிராஜ் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் மிரட்டுகிறார். ஏற்கனவே தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் ஜெகபதி பாபு இந்த படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக நடிக்கும் ஜெகபதி பாபு ஆக்ரோஷமான போஸ்டர் வெளியாகி பட்டையைக் கிளப்பிய நிலையில் தற்போது பிருத்விராஜ் இன் மிரட்டலான போஸ்டரும் வெளியாகி அவரது பிறந்த நாளான இன்று வைரலாகிறது.
எனவே வரிசையாக இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி படத்தை குறித்த ஆர்வத்தை ரசிகர்களிடம் எகிற வைத்திருக்கும் நிலையில் இந்த படம் அடுத்த வருடம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீசாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.