Ajith : அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. ஒரு புறம் கார் ரேசிலும் அஜித் செம பிசியாக இருக்கிறார். இந்த சூழலில் இந்த வாரம் முழுக்க அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏகே கொடுத்து வருகிறார்.
அதாவது சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதைப் பார்க்க தனது குடும்பத்துடன் அஜித் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் அஜித் வந்தது ரசிகர்களுக்கு பெரிய ஆறுதலாக அமைந்திருந்தது. மேலும் சமீபத்தில் அஜித் தனது 25ஆவது திருமண நாளை கொண்டாடியிருந்தார்.
இந்த வாரம் முழுக்க அஜித்தை பற்றி வரும் செய்திகள்
அந்த சமயத்தில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் கேக்கை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.இதையடுத்து இன்று டெல்லியில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது.
இதற்காக தனது குடும்பத்துடன் டெல்லிக்கு அஜித் புறப்பட்டிருக்கிறார். அவர் விருது வாங்குவதை பார்க்க அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். அதேபோல் இந்த வாரம் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் இருக்கிறது.
கண்டிப்பாக அதை ஆரவாரத்துடன் அஜித் ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர். இவ்வாறு இந்த வாரம் முழுக்க அஜித்தின் வாரமாக தான் இருந்து வருகிறது. அவருடைய செய்திகள் தான் பிளாஷ் நியூஸ் ஆக வந்து கொண்டிருக்கிறது.