நாளுக்கு நாள் சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகர்கள் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக இருக்கிறது. அதிலும் சீரியல் நடிகர்கள் நடிகைகள் மற்றவர்களுடன் உறவு கொள்ளும் விஷயம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
அந்தவகையில் தமிழ் சீரியல் தொலைக்காட்சிகளில் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட கள்ள உறவில் இருப்பது தெரிந்த அவர்களது குடும்பத்தில் பெரும் பிரச்சினை கிளம்பி ஊடகங்களிலும் பூதாகரமாக வெடித்தது.
தற்போது அதேபோல் ஒரு பஞ்சாயத்து தான் ஹிந்தி சீரியல் தொலைக்காட்சியில் நடைபெற்றுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் நடிகையாக வலம் வருபவர் நிஷா ராவல். 36 வயதான இவர் 2012 ஆம் ஆண்டு கரன் மெஹரா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நீண்ட நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சமீபத்தில் ஒரு பெரும் பிரச்சனை கிளம்பியுள்ளது. நடிகர் கரண் சமீபகாலமாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக தொடர்ந்து அவரது மனைவிக்கு செய்திகள் வந்த நிலையில் அவர் சந்தேகமடைந்தார்.
இது குறித்து அவர் விசாரித்து பார்க்கையில் உண்மைதான் என தெரிந்து நடிகர் கரண் இடம் அது குறித்த சண்டை போட்டுள்ளார். ஒருகட்டத்தில் சண்டை முற்றியதால் கையில் கிடைத்ததை எடுத்து மண்டையை உடைத்து விட்டதாக ஒரு வீடியோ வெளியிட்டு நடிகை நிஷா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பெரும்பாலும் நடிகர்கள் நடிகைகள் மத்தியில் இது போன்ற பிரச்சனைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு வருவது சாதாரண விஷயமாகி விட்டது. இதனால் ரசிகர்கள் பெரிதும் இதை கண்டு கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
