ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷூம், நானும் செய்த விஷயம்.. ஒப்பானக பேசிய நித்யா மேனன்

Danush : ஒல்லி என்றாலும் கில்லி மாதிரி நடிப்பேன் என்று தன் திறமையால் இன்று சாதித்துக் காட்டிய நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகராக உருவம் எடுத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை.

தனுஷ் தனது இயக்கத்தில் இரண்டாவது படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை எதிர்பார்ப்புடன் தான் இயக்கினார். ஆனால் அவர் எதிர்பார்ப்பு கை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. தனது அக்கா மகனான பவிஷை ஹீரோவாக வைத்து 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 13 கோடி மட்டுமே வசூல் செய்தது.

இந்த ஜோடி எப்படி..

தனுஷ், நித்யா மேனன் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் முதலில் நடித்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து எதிர்பாராத அளவு பெரிய வெற்றியை கொடுத்தது. காரணம் தனுஷ் மற்றும் நித்யாமேனனின் காம்போ மற்றும் நட்பு கலந்த அந்த நடிப்புதான்.

இதைத்தொடர்ந்து மீண்டும் நித்யா மேனனுடன் ஜோடி போட்டு தனுஷ் இட்லி கடை திரைப்படத்தில் அவரே இயக்கி, அவரே நடித்துள்ளார். திரைப்படம் இன்னும் திரையரங்குகளுக்கு வெளியாகாத போதிலும், ரசிகர்கள் இவர்களின் காம்போவை திரையில் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஓபனாக பேசிய நித்யா மேனன்..

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மேகம் கருக்குதா பாடல் இன்றளவும் பேமஸ். இப்போது கூட ரசிகர்கள் தங்களது போனின் ரிங்டோனில் இந்தப் பாடலை தான் வைத்துள்ளனர். தனுஷ் பாடிய இந்த பாடலுக்கு பெரிய பாராட்டு கிடைத்தது. இதைப் பற்றி நித்யா மேனன் தற்போது பேட்டியில் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

மேகம் கருக்காதா பாடலின் கடைசி பகுதியில் கொரியாகிராஃப் எதுவும் பண்ணாமல் நானும் தனுஷும் ஒன்றாக சேர்ந்து கைகோர்த்து ஆடினோம். அது அந்தப் பாட்டு எப்படி இவ்ளோ ஃபேமஸ் ஆச்சுன்னு தெரியல- நித்யா மேனன் “