சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மலையாள நடிகை நிவேதா தாமஸ் தமிழில் நவீன சரஸ்வதி சபதம் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார்.
தனது அழகான, க்யூட்டான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நிவேதா தாமஸ் தொடர்ந்து விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து இருந்தார். பின்னர் ரஜினி நடித்த தர்பார் படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்தார்.
தமிழில் என்ட்ரி ஆனதுமே டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய் ஆகிய நடிகர்களின் படங்களில் நடித்ததால் இவரது மார்க்கெட் எகிற தொடங்கியது. மேலும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது.
தொடர் வெற்றியால் தற்போது தெலுங்கில் ஒரு சில புதிய படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ் அவ்வப்போது விதவிதமான தனது ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் வாயில் சிகரெட்டுடன் நிற்கும் ரஜினியின் இளமை கால கட்அவுட் பக்கத்தில் நின்று, அதே ஸ்டைலில் இடுப்பில் கை வைத்து போஸ் கொடுத்து ஃபோட்டோ வெளியிட்டுள்ளார்.

மேலும் இது எப்படி இருக்கு என்ற பிரபலமான ரஜினி டயலாக்கை கேப்ஷனாக வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பதிவிட்ட 7 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.