எலியை பிடித்து தொங்கும் நிவின்பாலி.. நேரம் பட நடிகருக்கும் நேரமே சரியில்லபா

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் நேரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்று மலையாளத்தில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக மாறினார்.

இந்நிலையில் சமீபகாலமாக நிவின் பாலி நடிக்கும் படங்கள் ஓடாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். எல்லா பக்கமும் அவருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர் இப்பொழுது வித்தியாசமான கதை ஒன்றில் இறங்கியுள்ளார்.

கற்றது தமிழ், தரமணி போன்ற படங்களை எடுத்த இயக்குனர் ராம் ஒரு படத்தை இயக்க அதில் நிவின் பாலி நடிக்க உள்ளார். அந்த படத்தை நிறைய மரங்கள் மிருகங்களை வைத்து எடுத்து வருகிறார் ராம்.

பொதுவாக ராம் எடுக்கும் படங்கள் பெரும்பாலும் இயற்கையுடன் ஒன்று திறக்கும் வகையில் உருவாக்கப்படும். அதைப்போன்றே நிவின் பாலி-ராம் இணையும் இந்தப்படத்திலும் குரங்கு, முதலை போன்றவற்றை நடிக்க வைத்துள்ளாராம்.

நிவின் பாலியுடன் சூரி சேர்ந்து மிரட்டும் இந்த படத்தைப் பற்றி ஒரு பாசிட்டிவ் ரிசல்ட் கோடம்பாக்கத்தில் சுற்றி வருகிறது. படம் முழுக்க சூரி, நிவின் பாலியுடன் ஒரு எலி டிராவல் செய்து வருகிறது. இதுதான் ராம் எடுக்கும் முதல் கமர்ஷியல் படமாம்.

எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிவின் பாலி தமிழ் இயக்குனரான ராமனுடன் இணைந்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் என்ட்ரி கொடுத்திருப்பதுடன் அவருடைய இந்தப் படத்தை குறித்து ரசிகர்கள் இப்பொழுதிருந்தே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.