என்னது விஷால் விஷயத்துல அப்படி ஒரு சம்பவமே நடக்கலையா? பகீர் கிளப்பி, அந்தர் பல்டி அடித்த நடிகை

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தையே அல்லோலப்பட வைத்து விஷாலின் விஷயம். சினிமா நடிகர் மற்றும் நடிகர் நடிகர் சங்க தலைவரான விஷால் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தும் படத்தை வெளியிட முடியாமல் படக்குழு தவித்து வருகிறது.

இந்நிலையில் விஷால் நடிகர் சங்க கட்டிடம் முடிந்த பிறகு தான் தனக்கு திருமணம் நடக்கும் என அறிவித்தார். ஆனால் கட்டிடமும் கட்டி முடிந்த பாடில்லை, இவருக்கும் திருமணம் ஆகவில்லை. இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.

சமீபத்தில் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அபிநயாவுடன் விஷால் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 45 வயதை கடந்தும் சிங்கிளாக இருந்த விஷாலுக்கு இப்போதாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்ததே என சந்தோஷப்பட்டனர்.

மேலும் ஊடகங்களிலும் விஷால், அபிநயாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்தது. இந்தச் செய்தி இணையத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய பிறகு அம்மணி இதுகுறித்த விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது நானும் விஷாலும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்த வருகிறோம்.

இந்தப் படத்தில் இருவரும் கணவன், மனைவியாக நடிப்பதால் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதைத் தவறுதலாக புரிந்து கொண்ட சிலர் நிஜமாகவே எங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி வருகிறார்கள். இது உண்மை இல்லை, படத்திற்காக மட்டுமே இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக அபிநயா பதிவிட்டுள்ளார்.

விஷாலுக்கு திருமணம் என்ற ஒரு செய்தி வெளியாகி படத்திற்கு நல்ல பிரமோஷன் கிடைத்த பிறகு தற்போது அந்த பல்ட்டி அடித்துள்ளார் அபிநயா. மேலும், இப்போதாவது ஒரு வழியாக விஷாலுக்கு திருமணமாக உள்ளது என்ற சந்தோஷத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு அபிநயாவின் பதிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது.