விஜய்யும் இல்லை அஜித்தும் இல்லை சூர்யா காட்டில் கொட்டும் அட மழை.. 6 பேருடன் ரோலக்ஸ் ஆடப்போகும் கபடி

விஜய் மற்றும் அஜித்திற்கு அடுத்த மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சூர்யா. அஜித் குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு எந்த இயக்குனருடனும் கைகோர்க்கவில்லை. அதை போல் விஜய் ஜனநாயகன் படத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு கவனத்தையும் திருப்ப உள்ளார்.

இதுதான் நமக்கு சரியான நேரம் என சூர்யா படங்களை குவித்து தள்ளுகிறார். அவர் கைவசம் அரை டசன் படங்கள் இருக்கிறது. இப்பொழுது ரிலீஸான ரெட்ரோ படம் கூட அவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்துள்ளது. தற்சமயம் சூர்யா தன் கையில் அரைடசன் படங்கள் வைத்திருக்கிறார்.

சூர்யா 45 – 46 : ரெட்ரோ படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே சூர்யாஆர் ஜே பாலாஜி இயக்கும் தனது 45 வது படத்திலும் நடித்து வந்தார். இந்த படம் 50 சதவீதம் ரெடி ஆகிவிட்டது. இந்த படத்தை முடித்த பின்னர் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கை கோர்க்கிறார்.

வாடிவாசல்: இந்த படம் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே போகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தையும் கூடிய விரைவில் ஆரம்பிக்க போகிறார்கள். இதற்கு உண்டான ஏற்பாடுகளை எல்லாம் முன்னாடியே முடித்து விட்டனர்.

கைதி 2: ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளிவந்த இந்த படம் சக்கை போடு போட்டது. இதன் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் எடுக்க உள்ளார். இந்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா கெஸ்ட் ரோல் பண்ண உள்ளார்.

ரோலக்ஸ்: விக்ரம் படத்தில் 10 நிமிடம் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் என்ற பெயரிலேயே லோகேஷ் ஒரு படம் இயக்க போகிறாராம். இதை சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறி இருந்தார். அதைப்போல் மலையாள நடிகர் மற்றும் இயக்குனரான பசில் ஜோசப் இயக்கத்திலும் நடிக்கிறார்.