நிஜத்தில் மட்டுமின்றி சினிமாவிலும் பட்டையை கிளப்பிய அப்பா, பிள்ளை.. இரண்டு பேரையும் ஓரம் கட்டிய ராதிகா

சினிமா, அரசியல் இரண்டிலுமே தங்களது வாரிசுகளை கொண்டு வர வேண்டும் என்று பிரபலங்கள் எண்ணுவார்கள். மேலும் தந்தையின் செல்வாக்கை வைத்து அவற்றில் சுலபமாக நுழைந்து விட்டாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே ஜொலிக்க முடியும்.

அப்படி அப்பா தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நிலையில் மகனையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்பா அளவுக்கு சினிமாவில் அவரால் பெயர் வாங்க முடியவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதுமட்டுமின்றி அவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் இன்று வரை வெற்றிகரமான சிறந்த அப்பா, மகன் காமினேஷனில் அவர்கள் மட்டும் தான் உள்ளனர். அதாவது சிவாஜி மற்றும் பிரபு இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் ஹிட் கொடுத்துள்ளார்கள். இதில் நீதிபதி, மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா, இரு மேதைகள், நீதியின் நிழல் போன்ற படங்கள் அடங்கும்.

மேலும் சிவாஜி மற்றும் பிரபு இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பில் மிரட்டி இருப்பார்கள். ஆனால் இவர்களையே அந்த படத்தில் ராதிகா ஓவர் டெக் செய்திருப்பார். சிவாஜி மற்றும் பிரபு நடித்த பெரும்பான்மையான படங்களில் ராதிகாவும் இணைந்து நடித்திருந்தார்.

இவர்களது நடிப்புக்கு டஃப் கொடுக்கும் வகையில் ராதிகாவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். மேலும் இதில் பல படங்களில் பிரபுக்கு ஜோடியாக தான் ராதிகா நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சிவாஜி, பிரபு காம்போவில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் சிவாஜி ஹீரோ அந்தஸ்தை விட்டு இறங்கி துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதேபோல் பிரபுவும் ஹீரோவாக நடித்துவிட்டு இப்போது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதுவே நீண்ட காலம் இவர்கள் சினிமாவில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளது.