அக்டோபர் 11 ஓடிடியில் வெளியாகும் 20 படங்கள்.. வாழை எதில் தெரியுமா.?

October 11 OTT Release Movies: இந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை வருவதால் தியேட்டரில் ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகி இருக்கிறது. அதே போல் ஓடிடியிலும் கிட்டதட்ட இருவதற்கும் அதிகமான படங்கள் வெளியாக உள்ளது. என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வரவேற்பை பெற்ற வாழை படம் அக்டோபர் 11 ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது . மேலும் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான படிக்காத பக்கங்கள் படம் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

கருணாஸ் நடிப்பில் உருவான போகும் இடம் வெகு தூரம் இல்லை படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. தெலுங்கில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மது படலரா 2 மற்றும் ஆஹா ஓடிடியில் கௌரி புராணம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

அக்டோபர் 11 ஓடிடியில் வெளியாகும் படங்கள்

மலையாளத்தில் இந்த வாரம் இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. ஆஹா ஓடிடியில் லெவல் கிராஸ் மற்றும் ஜெய் மகேந்திரன் படம் சோனி லைவ் சீரிஸில் ஒளிபரப்பாக இருக்கிறது. பாலிவுட்டில் ஜி5 இல் வேதம் மற்றும் ஹாட் ஸ்டாரில் ஷரிப்ரா ஆகிய படங்கள் வெளியாகிறது.

நெட்ஃபிக்ஸில் கேல் கேல் மெய்ன் ஒளிபரப்பாக உள்ளது. இப்படத்தில் அக்ஷய்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரிது மற்றும் அனுஜின் ஆகியோர் நடிப்பில் உருவான குடார் கு 2 படம் அமேசானில் ஒளிபரப்பாக இருக்கிறது.

சர்ஃபியா படம் அக்டோபர் 11 டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. ராத் ஜுவான் ஹை படம் சோனி லைவ் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த வார விடுமுறையை கொண்டாடும் விதமாக ஓடிடி தளங்கள் எக்கச்சக்க படங்களை இறக்கி இருக்கிறது. மேலும் அடுத்த வாரம் ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Leave a Comment