Vijay Movie Actress; பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இளம் நடிகைக்கும் மிகப்பெரும் லட்சியமாக இருக்கிறது. அப்படி விஜய்யுடன் நடித்த நடிகை ஒருவர் ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஆட்டம் போட்டார்.
ஆனால் இப்போது அவருடைய மார்க்கெட்டே ஆட்டம் கண்டு போயிருக்கிறது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது. பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்ட பூஜா ஹெக்டே தான். தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து அல வைகுந்தபுரமுலூ என்ற படத்தில் நடித்திருந்தார்.
பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படத்தின் மூலம் இவருடைய மார்க்கெட்டும் ஏறியது. அது மட்டுமல்லாமல் அப்படத்தில் இடம்பெற்று இருந்த புட்ட பொம்மா என்ற பாடல் இந்திய அளவில் இவரை பிரபலமாக்கியது. அதனாலேயே இவரை தேடி வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது.
ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு அவர் ஒப்புக்கொண்டு நடித்த படங்கள் எதுவும் இவருக்கு கை கொடுக்காமல் போனது. அதிலும் ராதே ஷ்யாம், ஆச்சர்யா என அடுத்தடுத்த படங்கள் இவருக்கு தோல்வியை தான் கொடுத்தது. இருப்பினும் அவர் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வந்தார். அப்படி சமீபத்தில் வெளியான கிசி கா பாய் கிசிகி ஜான் படு தோல்வி அடைந்தது.
இதனால் இப்போது பூஜா ஹெக்டேவின் மார்க்கெட்டும் தரைமட்டம் ஆகிவிட்டது. தற்போது மகேஷ் பாபுவுடன் இவர் நடிக்க இருந்த படத்திலிருந்தும் நீக்கப்பட்டு விட்டார். இதற்கு முக்கிய காரணம் இவருடைய ராசி தான் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் இவர் துவண்டு போய் இருக்கிறாராம்.
இந்த இடைவெளியில் போட்டி நடிகைகள் அனைவரும் இவரை ஓவர் டேக் செய்து வாய்ப்புகளை பிடித்து வருகிறார்கள். அந்த கவலையும் சேர்ந்து கொள்ளவே இப்போது பூஜா முன்னணி ஹீரோக்கள் என்று இல்லாமல் இரண்டாம் தர நடிகர்களுடனும் நடிக்க தயார் என்ற ஆஃபரையும் அள்ளி வீசுகிறாராம். ஆனாலும் இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இப்படி அனைத்து பிளானும் மொத்தமாக சொதப்பிய நிலையில் இவர் இப்போது மூலையில் சுருண்டு கிடக்கிறாராம்.