ஒருவழியா வாடிவாசல் பட அப்டேட் வந்தாச்சு.. இனிமேதான் பாக்க போறீங்க சூர்யா ஆட்டத்த

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் உருவாகி வருகிறது. இப்பட அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு டிசம்பர்21 ஆம் தேதி தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார்.

அதன்பின், மதுரை அலங்காநல்லூரில் இப்பட ஷூட்டிங் தொடங்கப்பட்டது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றிய படமாக உருவாகவுள்ளது.

இதில், ஏறு தழுவும் வீரராக சூர்யா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆடுகளம் படம் போன்று இப்படமும் விறுவிறுப்பாக இருக்கும் என கூறப்பட்டது. கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது இப்படம். ஷூட்டிங் தொடங்கப்பட்டு சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது.

அதன்பின், ஷூட்டிங் தாமதமானது. மீண்டும் எப்போது ஷூட்டிங் தொடங்கும்? அடுத்த அப்டேட் வெளியாகும் என கேள்வி எழுந்தது.

அதன்படி, இப்பட முதற்கட்ட ஷூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் மதுரையில் தொடங்கும் என தெரிகிறது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்தது. இதனால் சூர்யா44, சூர்யா 45 படங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ள சூர்யா, வாடிவாசலில் மீண்டும் கோலிவுட்டை திரும்பி பார்க்க வைப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment