சூர்யா, ஜோதிகாவை தொடர்ந்து உதயநிதிக்கும் ஆஸ்கர் விருது.. எந்தப் பிரிவில் தெரியுமா?

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது சர்வதேச மற்றும் சமூகம் சார்ந்த பிரபலங்களை அடையாளம் கண்டு அங்கீகாரம் கொடுத்து விருதுகள் கொடுக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு 11 வது பாராளுமன்ற உலகளாவிய ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அமெரிக்காவில் நடக்க உள்ளது. ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.

இதில் சூர்யா, ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தின் மூலம் சமூக நீதியை வெளிப்படுத்துவதற்காக பழங்குடி மக்களுக்காக போராடிய நீதிபதி சந்துரு, இப்படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா மற்றும் ஜெய்பீம் படக்குழு நேரடியாக வந்து விருதை பெற்றுச் செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உலகெங்கிலும் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களை கௌரவிக்கும் வகையில் சமுதாய ஆஸ்கர் விருது கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021 என்ற பிரிவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

ஜெய்பீம் படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் இது போன்ற விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்படுவது உண்மைச் சம்பவத்தை தைரியமாக எடுக்க நினைக்கும் இயக்குனர்களை ஊக்குவிக்கப்படுகிறது. அதேபோல் உதயநிதிக்கு விருது அளிப்பது அவரது திரை ரசிகர்கள் மற்றும் அரசியல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.