ஒரு காலத்தில் டைரக்டர், ஹீரோ, ஹீரோயின், மியூசிக் டைரக்டர் என நல்ல காம்பினேஷன் இருந்தால் போதும் கண்ணை மூடிக்கொண்டு ஓடிடி நிறுவனங்கள் படத்தை பெரும் தொகைகளை கொடுத்து வாங்கி விடுவார்கள். இதனால் பட தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது.
ஹீரோக்களும் இந்த ஓடிடி நிறுவனங்கள் பெரும் தொகையை கொடுத்து வாங்குவதால் இஷ்டத்துக்கு 100 முதல் 150 கோடிகளுக்கு மேல் சம்பளம் கேட்டு வந்தனர் . இதுதான் இப்பொழுது தமிழ் சினிமாவுக்கு போராத காலமாய் மாறி உள்ளது. மலையாளம், தெலுங்கு இண்டஸ்ட்ரியில் ஹீரோகளுக்கு சம்பளம் மிக மிக குறைவு.
இப்பொழுது ஓடிடி நிறுவனங்கள் உஷாராகி உள்ளது. ஒரு படத்தை வாங்குவதற்கு முன் எங்களுக்கு பட கதையை குறைந்தது ஒரு மணி நேரமாவது கூற வேண்டும். தேவைப்பட்டால் படத்தின் முக்கியமான காட்சிகளை கட் செய்து காட்ட வேண்டும் என போர்க்கொடி பிடித்து வருகிறது.
சமீபத்தில் ஓடிடி நிறுவனங்கள் பெரிய ஹீரோக்களை நம்பி ஏமாந்த படங்கள் அதிகம். அப்படி பெரிய விலை கொடுத்து வாங்கப்பட்டது தான் ரஜினியின் வேட்டையன், லால் சலாம், கமலின் இந்தியன் 2 போன்ற படங்கள். இந்த படங்கள் எல்லாம் 100 கோடிக்கு மேல் கொடுத்த வழங்கப்பட்ட போதிலும் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
அதனால் இப்பொழுது பெரிய ஹீரோக்களை எல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை, கதைகளை மட்டும் குறி வைக்கிறார்கள். வேண்டுமென்றால் நான்கு வாரங்கள் ஆறு வாரங்கள் கழித்து ஓடிடி பிளாட்பார்மில் வெளியிடவும் தயாராக இருக்கிறார்கள், ஆனால் பழைய மாதிரி பெரும் தொகையை கொடுத்து வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை.