சார்பட்டா படத்தில் பா ரஞ்சித் சொன்னது எல்லாமே பொய்.. ஆதாரம் இருக்கு என அடித்துச் சொல்லும் பிரபல நடிகர்

பா ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் தளத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சார்பட்டா படத்தில் காண்பிக்கப்பட்ட பல விஷயங்கள் பொய் தான் என பிரபலம் ஒருவர் அடித்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களும் ஒரு படத்தை ஆகா ஓகோ என பாராட்டித் தள்ளினார்கள் என்றால் அது சார்பட்டா பரம்பரை படத்தை தான். அந்த அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

இந்த படத்தில் காண்பிக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் எனவும் விமர்சகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யாவுக்கு இந்த படம் அவருடைய வருங்கால மார்க்கெட்டுக்கு உதவியுள்ளது.

இப்படி படம் முழுக்க நிறைய பாசிடிவ் விஷயங்கள் இருக்கும்போது சார்பட்டா படத்தில் காட்டப்பட்ட காட்சிகளும் அந்த படம் படமாக்கப்பட்ட விதமும் ஒரு குறிப்பிட்ட மக்களை சங்கடப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் சார்பட்டா படம் மட்டும் தியேட்டரில் வெளியாகி இருந்தால் கண்டிப்பாக தியேட்டருக்குள் வெட்டுக்குத்து நடந்திருக்கும். பரம்பரைகளைப் பற்றிப் பேசும் போது அதைப் பற்றிய முழு விவரம் எதையும் சேகரிக்காமல் படத்தை எடுத்தால் இப்படித்தான் அரைகுறையாக இருக்கும் எனவும் வசை பாடியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் பற்றி புரிதல் இல்லாத காட்சிகள் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து படக்குழுவினர் என்ன பதில் தரப்போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு இதைப்பற்றி பேசி பிரயோஜனம் இல்லை என கடந்து சென்று விடுவார்கள் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

SARPATTA-CINEMAPETTAI-01
SARPATTA-CINEMAPETTAI-01