திடீரென ரஜினியை சந்தித்த பா ரஞ்சித்.. மூன்றாவது முறையாக இணைகிறார்களா?

கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் திரும்பிய பக்கமெல்லாம் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தைப் பற்றிய பேச்சுக்கள் தான் அதிகமாக இருக்கின்றன.

கடந்த சில வருடங்களில் வெளியான தமிழ் படங்களில் அனைத்து தரப்பு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமாக எல்லா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது சார்பட்டா பரம்பரை.

அதுமட்டுமில்லாமல் மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஆர்யாவுக்கு மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படமாகவும் சார்பட்டா படம் அமைந்துள்ளது.

இதனால் பா ரஞ்சித் பெயர் சினிமா வட்டாரங்களில் அதிகம் இடம் பெற்றதால் சமீபத்தில் ரஜினியை சந்தித்தவுடன் மீண்டும் மூன்றாவது முறையாக பா ரஞ்சித், ரஜினி கூட்டணி இணைய உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கான பின்னணிக் காரணங்கள் தற்போது கிடைத்துள்ளன. சமீபத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பணிகள் சென்னையில் ஒரு இடத்தில் நடைபெற்றது. அதேநாளில் பா ரஞ்சித் தன்னுடைய சார்பட்டா படத்தை அதே அரங்கில் உள்ள பிரிவியூ தியேட்டர் ஒன்றில் சில முக்கிய விஐபிகளுக்கு போட்டுக்காட்டி கொண்டிருந்தாராம்.

அந்த நேரத்தில் ரஜினி வருவதை தெரிந்து பா ரஞ்சித் ஏற்கனவே ரஜினியின் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கிய இயக்குனராக அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தாராம். இது அடுத்த படத்திற்கான சந்திப்பு இல்லை என்றே கூறுகின்றனர்.

rajini-pa-ranjith-cinemapettai
rajini-pa-ranjith-cinemapettai