சர்பேட்டா படத்தில் நடிக்க வேண்டியது இந்த நடிகர்தானாம்.. கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆகிட்டாராம்

தமிழில் மனிதர்களுக்கு இடையில் உள்ள பிரச்சனைகளை பற்றி படம் இயக்குவதில் பா.ரஞ்சித் முதலிடம் பிடிப்பார். ஆதிக்கம் அதனால் வந்த ஆனவம் அதனால் ஏற்படும் அழிவு என அப்பட்டமாக எடுத்துரைப்பார்.

இப்போது ஆர்யா நடிப்பில் “சர்பேட்டா பரம்பரை” படத்தை இயக்கி வந்தார். அறிந்தும் அறியாமலும் படத்தில் நெகட்டிவ் ரோலில் அறிமுகமாகி இப்போது மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ஆர்யா.

இப்போதும் ஆக்சன் படங்கள் என்று மட்டும் பாராமல் தனக்கு செட் ஆகும் கதைகளை எப்படியாக இருந்தாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சர்பேட்டா பரம்பரை சூர்யாவிற்காக எழுதப்பட்டதா என்ற கேள்விக்கு ” நான் எந்த கதையும் நாயகனை நினைத்து எழுதுவதில்லை என்றும் காலா படம் மட்டுமே சூப்பர் ஸ்டாருக்காக எழுதினேன் என்றும் கூறினார்.

மேலும் இந்த படத்திற்கான ஹீரோவுக்காக சூர்யா உட்பட 6 பேரிடம் பேசியதாகவும் கூறினார். சூர்யா நடிக்க வேண்டியது கடைசியில் வேண்டாம் என கூறி விட்டாராம். மெட்ராஸ் படத்தின் போதே அறிமுகமாகியிருந்த ஆர்யா தனக்கு ஒரு கதை தயார் செய்யும் படி கூறினார்.

அதனை தொடர்ந்து இந்த கதைக்காக ஆர்யாவிடம் கேட்கவே சட்டென ஒப்புக்கொண்டார். குத்துச்சண்டை படம் என்பதால் குத்துச்சண்டை வீரர் போலவே உடலை முறுக்கேற்றி வைத்துள்ளார் ஆர்யா என்றும் இயக்குனர் ரஞ்சித் கூறினார்.

சமீபத்தில் ஆர்யாவின் ஒர்க் அவுட் வீடியோக்கள் சமூக வலைகளில் வைரலானது எல்லோரும் அறிந்ததே.