மலக்குழி மரணத்தை வைத்து பப்ளிசிட்டி தேடிய பா ரஞ்சித்.. இதுதான் உங்க நியாயமா.?

பா ரஞ்சித் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் சமூக பிரச்சினைகளில் ஆர்வம் காட்டும் ஒருவராகவும் இருந்து வருகிறார். அதிலும் இவர் தன் ஒவ்வொரு படத்திலும் பல அநியாயத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்க கூடியவர். அதேபோன்று சமுதாயத்தில் நடக்கும் மக்கள் பிரச்சினைகள் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக கூறிவிடுவார்.

இது பல சமயங்களில் அவருக்கே எதிர்வினையாக முடிந்துவிடும். ஆனாலும் அவர் தன் கருத்தில் உறுதியாக தான் இருந்து வருகிறார். அப்படித்தான் விடுதலை சிகப்பி எழுதிய மலக்குழி மரணம் தொடர்பான கவிதை மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் இந்து கடவுளை அவர் அவமதித்ததாக கூறி பல தரப்பினரும் எதிர்மறை கருத்துக்களை கூறி வந்தனர்.

இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்த நிலையில் விடுதலை சிகப்பி சட்டரீதியான சிக்கல்களையும் எதிர்கொண்டார். இதனால் கடுப்பான பா ரஞ்சித் காவல்துறையினரையும், அரசையும் கண்டித்து ஆவேசமான ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். அதில் மலக்ககுழி மரணம் தொடர்பான தன் ஆதங்கத்தையும் பதிவு செய்திருந்தார்.

pa ranjith-tweet
pa ranjith-tweet

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில தினங்களில் முதல்வர் அதற்கான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது மலக்குழி மரணம் என்பது வெட்கக்கேடானது, இது சில மாதங்களிலேயே சரி செய்யப்பட்டு விடும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் மனித கழிவை மனிதனே அகற்றும் இந்த நடைமுறை முற்றிலும் அகற்றப்படும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இது வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்ற நிலையில் பா ரஞ்சித் இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அது மட்டுமின்றி அரசை எதிர்த்து நின்ற இவர் தற்போது அவர்களை பாராட்டாமல் சைலன்ட் மோடுக்கு சென்று விட்டார். இதுதான் தற்போது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குறை என்று சொல்வதற்கு மட்டும் முதல் ஆளாக வந்த பா ரஞ்சித் இப்போது ஒரு பாராட்டு கூட தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அப்படி என்றால் இதுவும் ஒருவித அரசியலா இல்லை சினிமாவில் நான் ஒரு பெரிய ஆள் என்று அவர் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறாரா எனவும் கருத்துக்கள் கிளம்பியுள்ளது. அந்த வகையில் அவர் மலக்குழி மரணத்தை வைத்து பப்ளிசிட்டி தேடி விட்டதாகவும், இதுதான் உங்கள் நியாயமா எனவும் ரசிகர்கள் ஆதங்கத்தோடு கேட்டு வருகின்றனர்.