சார்பட்டா வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை கையில் எடுக்கும் பா.ரஞ்சித்.. தரமான ஹீரோ யார் தெரியுமா.?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன் , “டான்சிங் ரோஸ்” சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள “சார்பட்டா பரம்பரை” படம் அனைத்துவிதமான இடங்களிலும் நல்ல ஒரு விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த வெற்றிக் கொண்டாட்டங்களில் இருந்து அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் பா ரஞ்சித். இவர் தன்னுடைய நீளம் புரோடக்சன்ஸ் மூலம் சில படங்களை தயாரித்தும் உள்ளார். தற்போது குதிரை வால், பொம்மை நாயகி போன்ற படங்களைத் தயாரித்துக் கொண்டும் இருக்கிறார்.

பா ரஞ்சித் இயக்கப் போகும் அடுத்த படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார் அட்டகத்தி தினேஷ். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என தெரிகிறது. கபாலி படத்தில் பா ரஞ்சித் உடன் இணைந்து செயல்பட்டுள்ளார் தினேஷ்.

கபாலி படத்தில் தினேஷ் ரஜினியின் கூட்டாளியாக வருவார். அவரது கூட்டத்தில் சுறுசுறுப்பான இளைஞனாக நடித்திருப்பார். இதனை கண்டு அவருக்கு பா ரஞ்சித் வாய்ப்பு அளித்ததாக தெரிகிறது.

ஏற்கனவே அட்டகத்தி,  விசாரணை, கபாலி, குக்கூ போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது வாராயோ வெண்ணிலாவே, பல்லு படாம பார்த்துக்கோ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

visaranai-11
visaranai-11