இண்டஸ்ட்ரியல் ஹிட்டுக்கு தயாராகும் 3 ஹீரோக்கள்.. லோகேஷுக்கு தூது விட்ட பான் இந்தியா ஸ்டார்

Lokesh Kanagaraj: லோகேஷ் இப்போது டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் ஆக இருக்கிறார். எப்படியாவது அவர் இயக்கத்தில் நடித்து விட்டால் போதும் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து விடலாம் என்ற நிலை இப்போது உள்ளது.

அதனாலேயே தற்போது அவருடைய கைவசம் ஆறு படங்கள் இருக்கிறது. அதில் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் உடன் அவர் இணைய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் என்ட்ரி ஆகிறார். கடந்த சில தோல்விகளை பார்த்த பிரபாஸுக்கு சலார் ஓரளவுக்கு நிம்மதியை கொடுத்தது.

லோகேஷை லாக் செய்த பிரபாஸ்

தற்போது கல்கியை பெரிதும் நம்பி இருக்கும் அவர் லோகேஷை வைத்து இன்டஸ்ட்ரியல் ஹிட் அடிக்கவும் திட்டமிட்டுள்ளார். மேலும் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

பல மாதங்களாக இப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தை நம்ம அட்லி இயக்கப் போகிறார். இதுதான் இப்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

இப்படியாக இந்த மூன்று ஹீரோக்களும் நம்ம ஊரு இயக்குனர்களை லாக் செய்து இருக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தமிழிலும் ஒரு ரவுண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.