பார்க்கிங் செகண்ட் பார்ட்டுக்கு டைட்டில் எல்லாம் ரெடி.. ஹரிஸ் கல்யாண் காட்டில் அடிக்கும் அட மழை

parking 2nd part: 2010 சிந்து சமவெளியில் தன்னுடைய கேரியரை ஆரம்பித்தார் ஹரிஷ் கல்யாண். கிட்டத்தட்ட 15 வருட சினிமா வாழ்க்கையில் வெறும் 17 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். அதிலும் சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை பார்க்கிங் படத்தை தவிர.

2023 இல் புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய படம் பார்க்கிங். இந்த படம் மட்டுமே ஹரிஷ் கல்யாணுக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் கொடுத்தது. வெறும் 4 கோடிகளில் உருவாக்கப்பட்ட இந்த படம் 20 கோடிகள் வசூல் சாதனை செய்தது.

இப்பொழுது இதன் இயக்குனர் ராம்குமார் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை மற்றும் டைட்டிலை ரெடி செய்து விட்டார். கூடிய விரைவில் இரண்டாம் பாகம் சூட்டிங் நடக்கப் போகிறதாம். இதற்காக டைட்டிலையும் ரெஜிஸ்டர் பண்ணி விட்டார்.

முதல் பாகத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் இருவரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இருவருக்கும் பார்க்கிங் விசயத்தில் நடக்கும் சண்டையை அவ்வளவு அருமையாக கட்டி இருப்பார் இயக்குனர் ராம் குமார். சுபமாக முடிந்த இந்தப் படம் அடுத்த பாகத்தின் கதை எப்படி என்று யூகிக்கவே முடியவில்லை.

ஹரிஸ் கல்யாண் காட்டில் அடிக்கும் அட மழை

இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெயர் “நோ பார்க்கிங்” என்று வைத்திருக்கிறார்கள். இதனால் ஏற்கனவே பார்க்கிங் செய்வதால் வந்த சண்டையை போல் “நோ பார்க்கிங்” என இரண்டாம் பாகம் சண்டைக்கு ஆரம்ப புள்ளி வைத்துள்ளார். இதனால் இது எந்த மாதிரி கதை என யோசிக்க முடியவில்லை.

இப்பொழுது ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் பெரிய ஹீரோக்கள் எல்லாரும் கதை கேட்டுள்ளனர். தனுஷ், சிவகார்த்திகேயன் என இருவருக்காகவும் கதை பண்ணும் முனைப்பில் இறங்கியுள்ளார் இந்த இளம் இயக்குனர். பெரிய ஹீரோக்கள் கால்ஷீட் பிரச்சினை வந்தால் இரண்டாம் பாகத்தை முடித்து விடலாம் என்றும் யோசனையில் இருக்கிறார்.