ஒரே ஷாட், இது என்ன பிரமாதம்.. விசித்திரமான அடுத்த முயற்சியில் களம் காணும் பார்த்திபன்

பார்த்திபன் தமிழ் சினிமாவை உலக அளவில் எப்படியாவது எடுத்து செல்ல ஒவ்வொரு முறையும் பாடுபட்டு வருகிறார். இவரது படைப்பு கதை, சிந்தனை, வசனம், ஒளிப்பதிவு ஒவ்வொரு விஷயங்களிலும் பல வித்தியாசங்களைக் கொண்டு வருபவர். இவருடைய படைப்பு மக்கள் மத்தியில் பேசப்படாமல் போனாலும் உலக சினிமாவில் இவரது பெயர் இருக்கும்படி படைப்புகள் அமையும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஒத்த செருப்பு என்ற திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை இருப்பினும் உலக அரங்கில் நல்ல பெயரை வாங்கியது. அதில் பட்ட சில அவமானங்களை மனதில் வைத்து அடுத்த படத்தை தொடங்கினார்.

இரவின் நிழல் இவருக்கு உண்டான தலைப்புடன் களமிறங்கிய பார்த்திபன் இந்த படத்தில் எப்படியாவது உலக சினிமா அளவிலும் மக்கள் மனதிலும் இடம் பெற வேண்டும் என்ற தீர்மானத்துடன் இறங்கினார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை சேர்த்தார், வித்தியாசமான கதையை ஒரே ஷாட்டில் எடுத்து அசத்தினார்.

மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் பல நடிகர்களையும் உள்ளடக்கி இரவின் நிழல் படத்தை வெளியிட்டார். படம் அவர் நினைத்தது போல் வெற்றியும் பெற்று இன்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த உழைப்புக்கு பின்னால் அவர் நிறைய பாடுபட்டிருக்கிறார், அவமானப்பட்டு இருக்கிறார்.

பார்த்திபன் நகைச்சுவை கலந்த பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பவர். இந்த படத்தில் வெற்றியை ரசித்து கொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இதில் என்ன வித்தியாசம் என்றால் நடிகர்கள் இல்லாத அதாவது மனிதர்கள் இல்லாத வெறும் விலங்குகளை வைத்து மட்டும் படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதில் பார்த்திபன் விலங்குகளுடன் நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் படம் முழுவதும் கிராஃபிக்ஸ் விலங்குகள் மட்டுமே நடிக்க வைக்கப் போகிறாரா இல்லை இவரது ஸ்டைலில் உண்மையான விலங்குகளை நடிக்க வைக்கப் போகிறாரா என்று தெரியவில்லை.

இப்பொழுது இந்த படத்திற்கான பேச்சு அனைவரையும் ஆச்சரியபடித்துள்ளது. அடுத்ததாக இனிமேல் கமர்சியல் திரைப்படங்கள் அதாவது இவர் நடித்த புதிய பாதை படத்தை மறுபடியும் எடுக்க போகிறார் என்று செய்தி வந்துள்ளது. ஆகையால் பார்த்திபனுக்கு இனிமேல் ஏறுமுகம்தான், பார்த்திபனின் வரவு தமிழ் சினிமாவிற்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது, இனிமேல் ஆரோக்கியமான சினிமாவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.