சமந்தா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிஸியாக படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் சமந்தாவையே தேடி வந்ததால் மற்ற நடிகைகள் இவர் மீது பொறாமை கொண்டனர். அதுவும் புஷ்பா படத்தில் இவர் ஆடிய கவர்ச்சி நடனம் சமந்தாவை வேற லெவலில் கொண்டு சேர்த்தது.
அதுமட்டுமின்றி நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குபவர்களில் சமந்தா தான் இரண்டாவது இடத்தில் இருந்தார். இவ்வாறு சமந்தா சினிமாவில் கொடி கட்டி பறந்த நிலையில் கடந்த வருடம் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.
அதிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்தால் சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் அவருடைய யசோதா, சாகுந்தலம் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. அதுமட்டுமின்றி சிட்டால் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். தன்னுடைய உடல்நிலை குறித்து கேலி, கிண்டல் செய்போருக்கு சமந்தா சரியான பதிலடியும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய ஓய்வு நேரங்களில் ஜிம்மில் சமந்தா வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமந்தா ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதனால் மீண்டும் சமந்தா உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் கவலை கொண்டனர். மேலும் சமந்தா மயோசிடிஸ் நோயால் முழுமையாக குணம் பெறவில்லை. அதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ஒரு பாத் டப்பில் முழுவதுமாக ஐஸ் கட்டி உள்ள நிலையில் அதில் சமந்தா பயிற்சி எடுக்கிறார். இது ஒரு வகையான டிரீட்மென்ட் என்று கூறப்படுகிறது. இந்த நோயிலிருந்து சமந்தா மீண்டு வருவதற்காக இவ்வாறு பயிற்சி எடுத்து வருகிறாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா என கவலையில் உள்ளனர்.
சமந்தா ஐஸ் பாத் டிரீட்மென்ட் புகைப்படம்
