சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட கிளம்பிவிட்டார். இவருடைய மனைவி கிருத்திகா உதயநிதியும் சினிமாவில் சில படங்களை இயக்கி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சி வாரிசு அரசியல் செய்து கொண்டிருக்கிறது என பலரும் விமர்சித்துக் கொண்டிருப்பதால், கருணாநிதிக்கு பின் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அவருக்குப் பின் அவருடைய மகன் இன்பநிதி ஸ்டாலின் என அவருடைய பெயரும் சமீப காலமாகவே சர்ச்சையில் சிக்கி வருகிறது.
இதனால் உதயநிதிக்கு அடுத்து இன்பநிதி ஸ்டாலின் திமுகவில் ஒரு பொறுப்பை ஏற்பார் என்று எதிர்க்கட்சிகள் பெரிதும் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இன்பநிதி தனது பெண் தோழிகளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாக பரவியது. அதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அதே சமயம் ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைப்பது சரி அல்ல என்றும் பல விவாதங்கள் சோசியல் மீடியாவில் எழுகிறது. இதனால் இன்பநிதியின் தாய் கிருத்திகா உதயநிதி, நேற்று இணையத்தில் புகைப்படத்தை பார்த்த பின் இன்று அதிரடி ட்விட்டர் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கிருத்திகா, “காதலிப்பதற்கும் காதலை வெளிப்படுத்துவதற்கும் அச்சமடைய வேண்டாம். இயற்கையை அதன் முழு மகத்துவத்தோடு புரிந்து கொள்ள இதுவும் ஒரு வழி” என மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார். இவருடைய இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவுகிறது. ஏனென்றால் நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம் என்று தன்னுடைய மகனுக்கு சொல்லும் அறிவுரையை வெளிப்படையாக ட்விட்டரில் தெரிவித்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.
பெரும்பாலான வீடுகளில் காதல் என்றாலே அடி உதை கிடைக்கக்கூடிய நிலையில், அதை சுதந்திரமாக செய்ய அனுமதி கொடுத்த கிருத்திகாவின் இந்த பதிவு பலரையும் வியப்படையை வைத்திருக்கிறது. ஆனால் ஒரு வகையில் கிருத்திகா சொல்வது சிலருக்கு சரி என்றாலும், நட்பு என்பது எல்லை மீறாமல் இருக்குமானால் நிச்சயம் ஆண்-பெண் நட்பு சரியானது என்று பலரும் விமர்சிக்கின்றனர்.