அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த சூழலில் டிசம்பர் 31ஆம் தேதி துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.
இந்நிலையில் அஜித் எப்போதுமே தனது சொந்த வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர். ஆகையால் இவருடைய புகைப்படங்களை இணையத்தில் பார்ப்பது மிகவும் கடினம். ஆனால் கடந்த வருடத்திலிருந்து அஜித்தின் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அந்த வகையில் நேற்று 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை அஜித் தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் அஜித்தின் மகள் அனோஷ்கா ஷாலினிக்கே டஃப் கொடுக்கும் வகையில் செம க்யூட்டாக உள்ளார். அதுமட்டுமின்றி தனது அம்மாவுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.
இதில் எது ஷாலினி, எது அனோஷ்கா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு இருவரும் அச்சு அசலாக ஒரே மாதிரி உள்ளனர். மேலும் அஜித்தின் மகனும் மளமளவென வளர்ந்துள்ளார். இப்போது அஜித்தின் துணிவு படத்திற்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.
ஷாலினியுடன் அஜித்

மேலும் துணிவு படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது. மேலும் சமீபத்தில் துணிவு படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை படக்குழு போஸ்டர் மூலம் வெளிப்படுத்துகிறது.
ஷாலினிக்கே டஃப் கொடுக்கும் அனோஷ்கா

குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடும் அஜித்
