அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விஜய்.. சொன்ன தேதியில் படம் வெளியாகுமா?

தற்போது விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் பார்வைக்கு வருவதற்கு தயாராக இருக்கிறது. இது தொடர்பான அனைத்து வேலைகளையும் தற்போது தயாரிப்பு நிர்வாகம் படுபிஸியாக பார்த்து வருகிறது. ஆனால் இப்படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்று சிலர் சந்தேகித்து வருகின்றனர்.

ஏனென்றால் சின்ன நடிகர்களின் திரைப்படங்களுக்கே ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்யும் போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் இந்த படத்திற்கு எந்த ஒரு விளம்பரமும் இதுவரை செய்யப்படவில்லை. மேலும் படத்திற்கு ஆடியோ லான்ச் பங்க்ஷன் கூட நடத்தப்படவில்லை.

இதனால் பலரும் இந்தப் படத்தில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது என்று யோசித்து வந்த நிலையில் சில அரசியல் நெருக்கடி தான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. சமீபகாலமாக விஜய் தன்னுடைய அரசியல் வருகைக்கான நகர்வுகளை சத்தம் இல்லாமல் செய்து வருகிறார்.

அதுபோக பிரபல அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். இந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பை கிளப்பியது. இது தற்போதைய அரசியல் பிரபலங்களையும் யோசிக்க வைத்துள்ளது. ஏராளமான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் விஜய் அரசியலில் அடுத்த கட்டத்திற்கு வந்து விடுவாரோ என்று பலருக்கும் ஒருவித பயமும் இருக்கிறது.

அதனால் தான் அவர் நடிக்கும் படத்திற்கு அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தற்போது வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு எந்த ஒரு விளம்பரமும் செய்யாததால் பலருக்கும் இந்த படம் பற்றிய நினைவே இல்லாமல் இருக்கிறது.

ஆனால் இந்தப் படத்தின் மூலம் வசூலில் மாஸ் காட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் இருக்கிறார். ஏனென்றால் அவர் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் நடிக்க இருக்கிறார். அதனால் இந்த படம் வெற்றி அடைந்தால் தான் அவரின் நேரடி தெலுங்கு படம் வியாபாரம் ஆகும்.

ஆனால் பீஸ்ட் திரைப்படம் வெளிவருவதில் பல அரசியல் நெருக்கடிகள் இருப்பதால் சொன்ன தேதியில் வெளிவருமா என்ற ஒரு சந்தேகமும் இருக்கிறது. இதனால் விஜய் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி தற்போது ஆலோசித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.