என்னது வணங்கான் டிராப்பானதற்கு பொம்பள சோக்கு தான் காரணமா! புட்டு புட்டு வைத்த பயில்வான்

சூர்யா, பாலா கூட்டணியில் உருவான வணங்கான் படம் பாதியிலேயே ட்ராப்பானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கான காரணம் குறித்து பல செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இப்போது பயில்வான் ரங்கநாதன் வணங்கான் படம் குறித்து பேசி உள்ளார்.

அதாவது பாலா ஏற்கனவே துருவ் விக்ரம் வைத்து ஒரு படம் இயக்கியிருந்தார். ஆனால் பாதியிலேயே இந்த படத்தின் கதை பிடிக்காத காரணத்தினால் விக்ரம் இந்த படத்தை அப்படியே ட்ராப் செய்யுமாறு கூறிவிட்டார். தயாரிப்பாளரும் இதற்கு ஒத்துக்கொண்டதால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இதனால் எந்த தயாரிப்பாளர்களும் பாலாவுக்கு படம் கொடுக்க தயாராக இல்லை. அதே சமயத்தில் பாலாவின் இல்லற வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அவரது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு பாலா உள்ளாகியுள்ளார்.

இதை அறிந்த சிவக்குமார் மற்றும் சூர்யா பாலாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வணங்கான் படத்தை கொடுத்துள்ளனர். ஆனால் பாலா ஒரு வன்மம் பிடித்தவர். இது தெரியாமல் சிவகுமார் மற்றும் சூர்யா இருவரும் ஏமாந்து விட்டனர்.

வணங்கான் படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடித்தார். பொதுவாக ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் எல்லோருக்கும் அருகில் தான் ரூம் புக் செய்வார்கள். பாலா என்ன நினைத்தாரோ தெரியவில்லை கீர்த்தி ஷெட்டிக்கு பக்கத்திலேயே ரூம் போட்டுள்ளார். இந்த ஹோட்டலில் இருந்து 15 கிலோமீட்டர் தள்ளி சூர்யாவுக்கு ரூம் போட்டுள்ளனர்.

இவ்வாறு பாலா செய்ததை சூர்யாவுக்கு சற்று கோபம் ஆகியுள்ளது. அதன் பின்பு சூட்டிங்கிலும் சில வாக்குவாதங்கள் நடைபெற்றது. அதன் பின்பு ஒரு வழியாக சூர்யா சமாதானமாகி சூட்டிங் தயாரானார். ஆனால் பாலா கோவாவில் தான் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி கதையிலும் நடிகர், தயாரிப்பாளரை கேட்காமல் மாற்றங்கள் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் என்று பயில்வான் கூறியுள்ளார். மொத்தத்தில் பாலாவின் பொம்பள சோக்கு தான் வணக்கான் படம் டிராப்பானதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.