பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட வசூலில் மண்ணைக் கவ்விய 2ம் பாகம்.. வருந்தும் மணிரத்னம்

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ஒரே சமயத்தில் தயாராகி அடுத்தடுத்து வெளியானது. அதிலும் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக  இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் விவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏனென்றால் படத்தின் வசூல் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு மிக குறைவாகவே கிடைத்திருக்கிறது.

முதல் நாள் வசூல் விவரத்தை பார்த்ததுமே மணிரத்னம் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார். படத்தின் ரிலீஸுக்கு முன்பே பொன்னியின் செல்வன் படக்குழு, கடந்த சில நாட்களாக முக்கிய நகரங்களில் ப்ரோமோஷன் வேலைகளை படு ஜோராக நடத்தினர். இதனால் வசூலும் தாறுமாறாக கிடைக்கும் என மனக்கோட்டை கட்டியிருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் நாள் வசூல் மொத்தமாகவே 67 கோடியை குவித்துள்ளது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியான முதல் நாளில் 85 கோடி கலெக்ஷன் ஆனது. இருப்பினும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் கம்மியாக கிடைத்திருக்கிறது.

இதனால் முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. மேலும் பொன்னியின் செல்வன் 2 தமிழகத்தில் 21 கோடி வசூல் ஆகி உள்ளது, தெலுங்கில் 5 கோடியும் கலெக்ஷன் செய்துள்ளது. மேலும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 36 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்துள்ளது.

அதேபோல் இந்தியா தவிர்த்து உலகில் மற்ற நாடுகளில் 31 கோடி வரை கலெக்ஷன் கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் 67 கோடி முதல் நாள் வசூலாக கிடைத்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு ஒட்டுமொத்தமாக 500 கோடி வசூல் கிடைத்தது. ஆனால் இரண்டாம் பாகத்திற்கு அதைவிட கம்மியாக கிடைத்து விடுமோ என்ற பதட்டத்தில் மணிரத்னம் இருக்கிறார்.