கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி உலக அளவில் வசூலில் பட்டையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட குழு முடிவு எடுத்தது.
இதற்கான வேலைகள் அனைத்தும் படு ஜோராக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி மற்றும் விக்ரம் இருவரும் மணிரத்னதிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படுகின்றனர்.
தங்கலான், இறைவன் என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் படு வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த மனிதர்களையும், இதுவரை சொல்லப்படாத பல உண்மைகளையும் மையமாகக் கொண்டதுதான் இப்படத்தின் கதை.
மேலும் படத்தின் நாயகிகளான பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோரும் நடிப்பில் பிச்சு உதறி இருக்கிறார்களாம். இதைப் போல் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இறைவன் படத்தின் படப்பிடிப்பும் முழு வீச்சில் தயாராகி உள்ளது.
படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் முடிவிலும் படக்குழு உள்ளது. இந்த சூழலில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் சின்ன சின்ன வேலைகள் இருக்கிறது. அதை முடித்து கொடுக்க இவர்களுக்கு நேரமில்லை. அதனால் இப்பொழுது பொன்னியின் செல்வன் 2-க்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
மணிரத்னம் இவர்களை அழைத்த போதிலும் இவர்களுக்கு அவருக்கு நேரம் ஒதுக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதனால் பொன்னியின் செல்வன் 2-வின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறதே என்று எதிர்பார்க்கப்படுகிறது.