மணிரத்னத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தினை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரெட் ஜெயண்ட் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா திடீரென்று அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏனென்றால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை உலகம் முழுவதும் பல விநியோகஸ்தர்கள் வெளியிட்டு நல்ல லாபம் பார்த்தனர்.
அதனால் இப்போது லைக்காவே வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யும் உரிமையை கைப்பற்றி உலகம் முழுவதும் வெளியிட களம் இறங்கி உள்ளது. இதற்கெல்லாம் காரணம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் தான். துணிவு படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றி நல்ல லாபம் பார்த்தது.
அதனால் இப்போது பொன்னியின் செல்வன் 2 படத்தினையும் வெளிநாடுகளில் சொந்தமாகவே ரிலீஸ் செய்து பல கோடிகளை அள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் லைக்காவே உலகம் முழுவதும் ரிலீஸ் செய்து பிசினஸ் செய்ய போகின்றனர். இவ்வாறு சொந்த தயாரிப்பு நிறுவனமே படத்தை ரிலீஸ் செய்வதால் விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அது மட்டுமல்ல இந்தியா தவிர உலகில் பல நாடுகளிலும் வசூலில் மாஸ் காட்ட போகும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தினை சொந்தமாக வெளியிட்டு பாக்ஸ் ஆபிஸின் வசூலை மொத்தமாக சுருட்டி விடலாம் என்ற முடிவுடன் தான் லைக்கா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. இதற்காக உலக நாடுகளுக்கு பொன்னியின் செல்வன் படக்குழுவை அழைத்து சென்று பிரம்மாண்டமாக புரமோஷன் பணிகளை துவங்கவும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நிச்சயம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தாறுமாறாக இருக்கும் என்பதினாலேயே லைக்கா, பொன்னியின் செல்வன் 2 படத்தினை வெளிநாடுகளில் சொந்தமாக வெளியிடும் அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனால் தற்போது கோலிவுட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.