பொன்னியின் செல்வன் வெற்றியால் 20 படத்தில் கமிட்டான நடிகர்.. திரும்பவும் மார்க்கெட்டை உயர்த்திய மணிரத்னம்

மணிரத்னத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து ரிலீசானது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி திரையரங்கில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் மார்க்கெட் டாப் கீரில் எகிறிக் கொண்டிருக்கிறது. அதிலும் பிரபல நடிகர் ஒருவருக்கு மறுபடியும் மவுசு அதிகமாகி விட்டது. இந்தப் படத்திற்கு பிறகு மட்டும் சுமார் 20 படங்களில் அவர் கமிட் ஆகி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் மற்றும் ருத்ரனில் பூமி என எதிர்மறை கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கும் சுப்ரீம் சூப்பர் ஸ்டார் சரத்குமார், தற்போது 20 பட வாய்ப்புகளை கைவசம் வைத்திருக்கிறார். இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நல்ல தமிழ் பேசும் சரத்குமார், கலை உலகில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தார்.

ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது கலைதான் அவர் தொழில் என்று பெருமையுடன் கூறியுள்ளார். நீண்ட வருடத்திற்கு பிறகு மறுபடியும் சரத்குமாரின் மார்க்கெட் எகிறுவதற்கு முக்கிய காரணம் மணிரத்னம் தான். அவர் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற மிகச்சிறந்த கதாபாத்திரத்தை சரத்குமாருக்கு கொடுத்திருக்கிறார்.

அதேபோன்று இன்றைய தலைமுறைகளுக்கு சரத்குமாரின் நடிப்பையும் பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுத்த வாரிசு படத்தின் இயக்குனர் வம்சிக்கும், ருத்ரன் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி என்று சரத்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல அவர் ஹீரோவாக நடித்த காலத்தை விட இப்போது தான் அதிக படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறாராம்.

வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பயணிப்பதால் அரசியலைப் பற்றி நிறைய கேள்விகளும் எழுகிறது. 2026 ஆம் ஆண்டில் ஒரு மாசான அறிவிப்பை கண்டிப்பாக கொடுக்கப் போகிறேன். எப்போதும் உங்கள் ஆதரவு அரசியலிலும் சினிமாவிலும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் சூப்பர் ஸ்டார் தெரிவித்துள்ளார்.