பொறாமையில் பொங்கிய பூஜா ஹெக்டே.. சமந்தாவுக்கு எதிராக போட்ட பதிவு

பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய் உடன் இணைந்த பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பூஜா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவை விமர்சிப்பது போல் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதாவது நான் தான் இனி சூப்பர் ஹீரோயின் இனிமேல் எனக்குத்தான் மார்க்கெட் எனவும் அதில் பதி விட்டதாகவும், சிறிது நேரத்திலேயே அந்த பதிவு நீக்கிவிட்டதாகவும் செய்திகள் உலா வருகிறது.

ஆனால் பலரும் பூஜா ஹெக்டே மறைமுகமாக சமந்தாவை தான் குறிப்பிட்டு இப்படி பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இருவருக்கும், சமந்தாவுக்கும் தான் காம்பெடிஷன் நடப்பதாகவும் ரசிகர்கள் கட்டுக்கதை கட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் சமந்தாவுக்கும் உங்களுக்கும் பிரச்சனை உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே சமீபத்தில் எனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருந்தது. நான் அந்தப் பதிவை போடவில்லை என கூறி உள்ளார். மேலும் நேர்மையான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகம் வரவேற்பு பெறுகிறது.

இதனால் அந்த விஷயம் உண்மை இல்லை என்றாலும் அதைப் பற்றி தான் பலரும் விவாதித்து வருகின்றனர். அதனால் தான் என்னுடைய வாழ்க்கையில் நேர்மையான எண்ணங்களை நிரப்பிக் கொண்டு இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் என்னுடைய சமூக வலைத்தளங்களில் பாசிடிவ்வான விஷயங்களை மட்டுமே பகிர்ந்து வருவதற்கு அதுதான் காரணம் என பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

மேலும், சமந்தாவிற்கும் தனக்கும் எந்த பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சினிமாவை தாண்டி வெளியே சமந்தாவுக்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது என கூறியுள்ளார். இதனால் பூஜா ஹெக்டே மற்றும் சமந்தா இருவர் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என நடந்து சர்ச்சைகளுக்கு பூஜா ஹெக்டே முற்றுபுள்ளி வைத்துள்ளார்.