சமீபகாலமாக விஜய் நடிக்கும் படத்தில் விஜய் முதலில் ஒப்பந்தம் ஆகிறாரோ, இல்லையோ, இந்த நடிகர் ஒப்பந்தமாகி வருகிறார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். அப்படி என்னப்பா ஸ்பெஷல் அவருக்கு.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த நடிகரை கிண்டல் செய்யாத பத்திரிகையும் கிடையாது, தமிழ் சினிமா நடிகர்களும் கிடையாது. இவ்வளவு ஏன், அந்த நடிகரை தொட்டுப் பேசக் கூட யோசிப்பார்கள்.
ஆனால் இப்போது அவர் இல்லாத படமே கிடையாது. முன்னணி நடிகர்கள் பலரும் என்னுடைய படத்தில் அவர் நடித்தாக வேண்டுமென வலுக்கட்டாயமாக நடிக்க வைத்து வருகின்றனர். இதனால் தற்போது நம்பர்-1 காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவர்தான் நம்ம யோகி பாபு. தளபதி விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியானாலும் உறுதி செய்யப்பட்ட தகவல்களாக இல்லை.
ஆனால் சமீபத்தில் ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டரின் வாயிலாக யோகி பாபுவிடம் தளபதி 65 படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, எஸ் என பதில் கொடுத்துள்ளார். சர்கார் மற்றும் பிகில் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏற்கனவே நெல்சன் மற்றும் யோகிபாபு கூட்டணியில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் காமெடி காட்சிகள் செமையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.