ஐஸ்வர்யா ராய் தான் வேணும்.. 10 வருஷமா தயாரிப்பாளரை அலைய விட்ட அப்பா, மகன்

Aishwarya Rai: தயாரிப்பாளர்களை காக்க வைப்பது, அலைய வைப்பது எல்லாம் சில ஹீரோக்கள் செய்யும் வேலை தான். அதேபோல் தயாரிப்பாளர் சுமை தெரியாமல் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களும் உண்டு.

ஆனால் இங்கு ஒரு நடிகர் 10 வருடம் தயாரிப்பாளரை அலையவிட்ட சம்பவம் நடந்திருக்கிறது. அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது தற்போது கேரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய் தான்.

ஆரம்பகால கட்டத்தில் இவரை வைத்து படம் தயாரித்தது எஸ்ஏ சந்திரசேகர் தான். தன் மகன் பெரிய ஹீரோவாக வர வேண்டும் என இவர் பல வேலைகள் செய்தது திரையுலகம் அறிந்ததே.

அப்படித்தான் விஷ்ணு என்ற படம் விஜய்க்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதற்கு முன்பு வரை அவர் தன் அப்பாவின் தயாரிப்பில் தான் நடித்து வந்தார். இந்த படம் மூலம் தான் வெளி தயாரிப்பாளர் படத்தில் நடிக்க தொடங்கினர்.

தயாரிப்பாளரை அலைய விட்ட அப்பா, மகன்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதே ஆஸ்கர் மூவிஸ்க்கு அடுத்த படம் பண்ண விஜய் சம்மதித்திருக்கிறார். 10 லட்சம் சம்பளம் பேசப்பட்டு ஒரு லட்சம் அட்வான்ஸ் தொகை கூட கொடுக்கப்பட்டு விட்டதாம்.

விஜய் மற்றும் அவருடைய அப்பா அம்மா கூட கண்டிப்பாக படம் பண்ணி தருகிறோம் என வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதன் பிறகு பத்து வருடமாக அலைந்தது தான் மிச்சம்.

ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டும் இல்லை என்றால் சுஸ்மிதா சென் என உலக அழகிகளை அழைச்சிட்டு வாங்க. ஏ ஆர் ரகுமான் இசை தான் வேண்டும் என ஏகப்பட்ட கண்டிஷன் போட்டிருக்கிறார்கள்.

இப்படி தன்னை அவர்கள் ஏமாற்றியதாக தயாரிப்பாளர் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் நான் சொல்வது பொய் என்றால் விஜய் தரப்பில் இருந்து மறுப்பு கொடுக்க சொல்லுங்க பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.