தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனைகள் செய்தாலும் விமர்சகனாக ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இது படக்குழுவினருக்கு கொஞ்சம் அதிருப்தி தான்.
விஜய், லோகேஷ் கூட்டணி என்றதுமே விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் எக்கச்சக்கமாக இருந்தது. அதற்கு காரணம் அதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படமாக அமைந்தது தான்.
அந்த வகையில் தளபதிக்கும் ஒரு பிளாக்பஸ்டர் படம் கிடைக்கும் என நம்பினர். அதே சமயத்தில் விஜய் வித்தியாசமான படங்களில் நடிக்கப் போகிறார் எனவும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் படம் வெளியானதும் கொஞ்சம் அதிர்ச்சிதான். வழக்கமான மாஸ் மசாலா படமாக அமைந்துவிட்டது.

மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதப்பட்டதால் மற்ற நடிகர்களுக்கு பெரிய அளவு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சும்மா வந்துட்டு போகும் நிலைமை தான்.
அப்படி விஜய்யின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் தான் நடிகர் பிரேம். முதலில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் பிரேமை ஒப்பந்தம் செய்யும் போது, ஒரு முக்கிய கதாபாத்திரம் எனவும் விஜய்யுடன் படம் முழுக்க வருகிற கதாபாத்திரம் எனவும் கூறித்தான் ஒப்பந்தம் செய்தாராம்.

ஆனால் படத்தை பார்க்கும்போது ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்ததால் அதிர்ச்சி அடைந்தாராம் பிரேம். விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து தான் நடித்த பல காட்சிகளை வெட்டி வீசி விட்டார்கள் எனவும் புலம்பியுள்ளார்.