சமீபகாலமாக தமிழ் தொலைக்காட்சிகளில் வட இந்திய வாடை அதிகம் வீசுகிறது. இருந்தாலும் நம்ம ஊருக்கு ஏற்றபடி கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து எப்படியோ ரசிகர்களை பார்க்க வைத்து விடுகிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடிக்கும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் ஆகியவற்றைத் தமிழில் ரீமேக் செய்து விடுகின்றனர். தற்போதெல்லாம் படங்களைவிட சீரியல்கள்தான் அதிகம் ரீமேக் செய்யப்படுகின்றன.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்த விஜய் டிவி தற்போது 5வது பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிக்கான வேலைகளைத் தொடங்கி விட்டது.

கடந்த வருடத்தை போல் ஆட்கள் தேர்வில் சொதப்பி விடக்கூடாது என்பதற்காக இப்போது யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள், அவர்களை எந்த மாதிரி டெஸ்ட் செய்து உள்ளே அனுப்ப வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த முறை சர்ச்சை அதிகமாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். இதனால் சினிமாவைச் சேர்ந்த பல சர்ச்சை நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க பிரபல நடிகையின் மகளும் கலந்துகொள்ள இருப்பதாக கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக இருந்து தற்போது குணச்சித்திர நடிகையாக மாறியுள்ளார் நடிகை சகிலா. இவருக்கு ஒரு மிலா என்ற மகள் உள்ளார். அவர் ஒரு திருநங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரை எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படுகிறதாம். அப்படி அவர் மட்டும் கலந்து கொண்டால், பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு திருநங்கையை கலந்து கொள்ள வைத்த முதல் மொழியாக தமிழ்மொழி இருக்கும் எனக் கூறுகின்றனர்.
