கங்குவா படத்தால் நடிகைக்கு ஏற்பட்ட அதிருப்தி.. கடைசியில் பட்டை நாமம் போட்ட இயக்குனர்

Kanguva: சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் கங்குவா. இதுவரை சூர்யாவின் திரை வாழ்க்கையில் இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட பத்து மொழிகளில் 3டி அனிமேஷனில் கங்குவா படம் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி பிரளயத்தையே ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில் கங்குவா படத்தின் படப்பிடிப்பு குளிர் பிரதேசங்களில் நடைபெற்று வந்தது. மேலும் முற்காலம் மற்றும் தற்போது உள்ள காலகட்டம் என இரண்டு காலங்களையும் கங்குவா படத்தில் காட்ட இருக்கிறார்கள். இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த நடிகை ஒருவர் கங்குவா படத்தால் ஏமாற்றத்தை அடைந்திருக்கிறார்.

அதாவது சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா படத்தில் திஷா பதானி நடித்துள்ளார். இப்படம் பல மொழிகளில் வெளியாவதால் தனக்கான ஸ்கோப் கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் இதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற்று விடலாம் என்ற கனவுடன் தான் நடிகை இருந்தார்.

ஆனால் சிறுத்தை சிவாவால் மொத்தமாக இது சுக்கு நூறாக போய்விட்டது. அதாவது திஷா பதானி கோவாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அதன்பிறகு அவரை கங்குவா படக்குழு அழைக்கவே இல்லையாம். இப்போது விசாரித்து பார்த்தால் ஐந்து நாட்களில் திஷா பதானி காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

கங்குவா படத்தில் அவரது போர்ஷன் மிகவும் குறைவாம். இதில் ஐந்து நாட்கள் மட்டுமே அவரது படப்பிடிப்பு நடந்த நிலையில் படத்தில் இன்னும் குறைந்த காட்சிகள் மட்டுமே அவர் வருவார். முற்காலத்தில் உள்ள காட்சிகளில் மட்டும்தான் இவர் இடம் பெறுவாராம். ஆகையால் கங்குவா படத்தில் அவருடைய ஸ்கோப் மிகவும் குறைவு.

தன்னுடைய கனவில் மண்ணள்ளி போட்டு கடைசியில் சிறுத்தை சிவா பட்டை நாமம் போட்டு விட்டார் என்று புலம்பித் தவித்து வருகிறாராம் திஷா பதானி. ஆனாலும் பல மொழி படமாக இருப்பதால் எல்லோருக்குமே சரியான முக்கியத்துவத்தை இயக்குனர் கொடுத்து இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.