ஓடிடி தளத்தில் வெளியாகப்போகும் கேஜிஎப் 2.. பல கோடி கொடுத்து தட்டித் தூக்கிய நிறுவனம்

பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14 அன்று வெளியான திரைப்படம் கே ஜி எஃப் 2. முதல் பாகத்தை காட்டிலும் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக கிடைத்தது.

அதன் அடிப்படையில் தற்போது இப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்துள்ள கேஜிஎப் 2 இந்திய சினிமாவுக்கே கிடைத்த ஒரு பெருமையாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் படத்தில் ராக்கி பாயாக நடித்திருக்கும் யாஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது மேலும் இதன் அடுத்த பாகத்தையும் விரைவில் தொடங்க கோரி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு இந்த படத்தின் மீதான தாக்கம் இருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தயாரிப்பு நிர்வாகம் தற்போது இதன் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனத்திற்கு அதிக தொகைக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வரிசையில் கே ஜி எஃப் 2ன் ஓடிடி உரிமை சுமார் 320 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த திரைப்படமும் இவ்வளவு கோடிக்கு விற்பனை ஆனது கிடையாது. இந்த செய்தி தான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் இப்படம் வரும் மே 27 முதல் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகத்தை அமேசான் ப்ரைம் தளம் வாங்கி இருந்தது. அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்தையும் அமேசன் தான் கைப்பற்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும் ஜீ நெட்வொர்க்கும் இந்த படத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் ஒரு தகவல் கூறுகின்றது. அதனால் இந்த குழப்பங்களுக்கான பதிலை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.