விஜய் டிவி பல பேரின் வாழ்க்கையில் புகுந்து தாறுமாறாக விளையாடியுள்ளது அவ்வப்போது சிலர் கொடுக்கும் பேட்டிகளில் இருந்து அப்பட்டமாக தெரிகிறது. அந்த வகையில் பிரபல இயக்குனரின் மகன் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார் போல.
விஜய் டிவி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பெயர் போனது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் பல பிரபலங்களுக்கு நல்லதும் செய்துள்ளது கெட்டதும் செய்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிகளால் வெளியில் தலைகாட்ட முடியாமல் போன பிரபலங்களும் உள்ளனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பிரபல இயக்குநர் பி வாசுவின் மகன் ஷக்தி. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிறைய கெட்ட பெயர்களை சம்பாதித்து தற்போது சினிமாவிலும் சுத்தமாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சக்தி, தனக்கு ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்படி கெட்ட பெயர் ஏற்பட்டது என்பதை பற்றி விலாவரியாக கூறியுள்ளார். அதற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய் டிவிதான் என ஓபன் ஆக சொல்லியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பொருத்தவரை உள்ளே என்ன நடக்கிறது என்பதை விஜய் டிவி தங்களது டிஆர்பிக்காக அப்படியே மாற்றி சில பெயரை கெட்டவர்களாக காட்டிவிடுகிறது. அப்படி ஒன்றை தான் எனக்கும் செய்து விட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்து விட்டேன் என வருத்தப்பட்டு கூறியுள்ளார் சக்தி. சினிமாவில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை, அதே சமயம் அதற்கு முன்னர் தனக்கு மரியாதை கொடுத்துக் கொண்டிருந்த பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்னை பார்த்தாலே ஒரு மாதிரி நடந்து கொண்டதெல்லாம் என் மனதை மிகவும் பாதித்து விட்டது எனக் கூறி புலம்பித் தள்ளியுள்ளார் சக்தி.
