Takkar-Por Thozhil: கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் சித்தார்த் நடிப்பில் உருவான டக்கர் மற்றும் சரத்குமாரின் போர் தொழில் படங்கள் வெளியாகி இருந்தது. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா கவுசிக், முனிஸ்காந்த் மற்றும் பலர் டக்கர் படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வந்தது. ஆக்ஷன் காட்சிகளில் சித்தார்த்தின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு இருந்தது. இப்படத்திற்கு போட்டியாக சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா போன்ற பிரபலங்களின் நடிப்பில் போர் தொழில் படம் வெளியாகி இருந்தது.
இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். இப்படம் முதல் நாளில் வெறும் 55 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது. ஆனால் சித்தார்த்தின் டக்கர் படம் 80 லட்சத்தை தாண்டி வசூல் செய்தது. இப்போது படத்திற்கு கிடைக்கும் விமர்சனத்தின் காரணமாக போர் தொழில் அதிரடி காட்டி உள்ளது.
அதிலும் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை பார்த்திடாத சீரியல் கில்லர் கதையை அழகாக இயக்குனர் விக்னேஷ் ராஜா கொடுத்திருந்தார். அதன் காரணமாக இரண்டாவது நாள் மட்டும் 2.17 கோடி வசூலை போர் தொழில் படம் அள்ளி உள்ளதாம்.
இப்படத்திற்கு கூட்டம் அலை மோதுவதால் அதிக காட்சிகள் போர் தொழில் படத்திற்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் படத்தின் வசூல் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் முதல் நாளில் போர் தொழிலை விட அதிக வசூல் செய்த டக்கர் இரண்டாவது நாள் முடிவிலும் 85 லட்சம் தான் வசூல் செய்திருந்தது.
அதுமட்டும்இன்றி டக்கர் படம் திரையிடப்பட்ட சில திரையரங்குகளில் இப்போது போர் தொழில் படம் ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஆகையால் இன்னும் குறுகிய காலத்திலேயே படக்குழு போட்ட பட்ஜெட்டை அள்ளி பல கோடி லாபம் பார்க்க இருக்கிறது. மேலும் போர் தொழில் போன்ற நல்ல படங்களுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.