அசோக் செல்வனை டம்மி ஆக்கிய நடிப்பு அரக்கன்.. ரீ-என்ட்ரியில் நாலா பக்கமும் பாராட்டு மழை!

Por Thozhil Review: பொதுவாக 80களில் நடித்த நடிகர்கள் தற்போது வரை முன்னணியில் இருக்கிறார்களா என்றால் அது ரஜினி கமலை தவிர வேறு யாரும் கிடையாது என்றே சொல்லலாம். இதற்கிடையில் உள்ள நடிகர்கள் ஏதோ ஒரு சில படங்களில் நடித்தாலும் டம்மியான கேரக்டர்களில் நடித்துக் கொடுத்துவிட்டு போகிறார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் விதிவிலக்காக சரத்குமார் எப்பொழுதுமே அவருடைய கேரக்டரை நிலைநிறுத்தி பேசும்படியாக நடிப்பதில் மிகவும் தலை சிறந்தவர். சமீபத்தில் விஜய்யின் அப்பாவாக வாரிசு படத்தில் நடித்ததிலும் அவருடைய கேரக்டர் முக்கிய கதாபாத்திரமாக அமைந்தது. இதனை அடுத்து நேற்று வெளிவந்த போர் தொழில் படத்திலும் இவருடைய அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்படத்தின் கதையில் தொடர் கொலை நடந்து வருவதை விசாரிக்கும் அதிகாரியாக லோகநாதன் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக படிப்பை முடித்துவிட்டு பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் இவருக்கு கீழே பணிபுரிகிறார்.

இவர்கள் சேர்ந்து அந்த கொலையாளியை கண்டுபிடிக்கும் ஒரு திரில்லர் படமாக கடைசி வரை சஸ்பென்ஸில் கதை நகர்கிறது. இப்படத்தில் முக்கியமான ஹீரோவே சரத்குமார் தான் என்று சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு அசோக் செல்வனை டம்மியாக்கி நடிப்பு அரக்கன் சரத்குமார் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்.

இவருடைய கதாபாத்திரம் நேர்மையான ஸ்ட்ரிட்டான ஒரு போலீஸ் ஆபீஸராகவும் அதற்காக எந்தவித பந்தாவும் காட்டாமல் இவருக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து பார்ப்பவர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். அத்துடன் இப்படத்திற்கு எந்தவித நெகட்டிவ் இதுவரை பார்த்தவர்கள் யாரும் கொடுக்கவில்லை.

சரத்குமாரின் நடிப்புதான் இப்படத்திற்கு மிகப்பெரிய ஹைலைட்டாகவும் ரீ-என்ட்ரியில் வந்து கலக்கி நாலா பக்கமும் இவரைப் பற்றி புகழ்ந்து பேசும் அளவிற்கு இவருடைய நடிப்பை கொடுத்து விட்டார். மொத்தத்தில் போர் தொழில் படம் சரத்குமாரின் சினிமா கேரியரில் மிக பெஸ்டான படம் என்று இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக வருகிறது.