சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பு அபாரம்.. போர் தொழில் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Por Thozhil: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நிறைய சீரியல் கில்லர் படங்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளது. அந்த வரிசையில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் போர் தொழில் என்ற படம். இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தைப் பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். எல்லோருமே படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை கதையில் மூழ்கடித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

por-thozhil-twitter-review
por-thozhil-twitter-review

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எப்போதுமே சில நெகட்டிவ் விமர்சனங்களை கூறிவரும் நிலையில் போர் தொழில் படத்தை பற்றி பாசிடிவ் விமர்சனம் மட்டும் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி மிகவும் பரபரப்பான திரில்லர் படமான போர் தொழில் படத்தை தவற விட்டு விடாதீர்கள் என்று ட்விட் செய்துள்ளார்.

por-thozhil-twitter-review
por-thozhil-twitter-review

ரசனையான திரைக்கதையுடன் கூடிய அற்புதமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக போர் தொழில் அமைந்துள்ளது. ராட்சசன் மூலம் பெருமை சேர்த்த தமிழ் சினிமா மேலும் ஒரு ரத்தினத்தை அளித்துள்ளது. அனைவரும் கட்டாயம் இந்த படத்தை பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

por-thozhil-twitter-review
por-thozhil-twitter-review

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பு அபாரம். ஒளிப்பதிவு, பிஜிஎம், சவுண்ட்ஸ், எடிட்டிங் சூப்பர். எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர் விக்னேஷ் ராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை அழுத்தமான திரைக்கதை. லேசான நகைச்சுவை தொடுதல் அற்புதம். க்ரைம் த்ரில்லர் பார்க்கத் தகுந்தது படம்.

por-thozhil-twitter-review
por-thozhil-twitter-review

சீட்டின் நுனிக்கு வரச் செய்த திரில்லர் படம் போர் தொழில். ஒழுக்கமான முதல் பாதி மற்றும் சிறப்பான இரண்டாம் பாதி, சரத்குமாரின் சிறந்த கதாபாத்திரங்களில் இப்படமும் ஒன்று. அசோக் செல்வன் மற்றும் நிகிலா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

por-thozhil-twitter-review
por-thozhil-twitter-review
por-thozhil
por-thozhil
por-thozhil-twitter-review
por-thozhil-twitter-review