வசூலில் மரண அடி, தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.. பிரபாஸின் திடீர் முடிவு

பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் சில நாட்களுக்கு முன் பிரம்மாண்டமாக வெளியானது.

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் ஒரு காதல் காவியமாக வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் வெற்றி பெறவில்லை. படத்தைப் பற்றிய பல நல்ல விமர்சனங்கள் இருந்தாலும் படம் அவ்வளவாக எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கணக்கு பார்க்காமல் 350 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை கொட்டி செலவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்தப் படம் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலும் படம் தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானதால் படத்திற்கான பிரமோஷன் செலவும் எக்கச்சக்கமாக எகிறி விட்டதாம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் அதிகபட்ச கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்.

இந்நிலையில் படத்தின் நாயகன் பிரபாஸ் தற்போது தயாரிப்பாளருக்காக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது அவர் இந்தப் படத்திற்காக வாங்கிய சம்பள பணத்தில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து உள்ளார்.

ஒரு திரைப்படம் நஷ்டம் அடைந்து விட்டால் அதன் பாதிப்பை முழுக்க முழுக்க தயாரிப்பாளர் மட்டுமே அனுபவிக்க வேண்டியிருக்கும். அப்படியிருக்கும் நிலையில் எந்த நடிகரும் பட தயாரிப்பாளருக்கு உதவுவது கிடையாது. ஆனால் பிரபாஸ் தன் பட நஷ்டத்திற்காக தயாரிப்பாளரிடம் 50 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளது தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.