நடிப்பை தவிர எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் பிரபுதேவா.. அதிருப்தியில் இருக்கும் இயக்குனர்

நடன இயக்குனர், ஹீரோ, டைரக்டர் என்ற பல முகங்களை கொண்ட பிரபுதேவா தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில காலங்கள் தமிழ், ஹிந்தி என்று திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருந்த அவர் இப்போது அதை எல்லாம் மூட்டை கட்டி விட்டு முழு நேர நடிகராக மாறி இருக்கிறார்.

இவருடைய நடிப்பில் மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானது. அதை தொடர்ந்து இவர் தற்போது செஸ் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு தான் பிரபுதேவா தேவையில்லாத சில விஷயங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பதாக பட குழுவினர் அதிருப்தியுடன் பேசி வருகின்றனர்.

படத்தில் முதல் நாள் ஷூட்டிங்கில் பிரபுதேவா இயக்குனர் சொன்னதை கேட்டு அப்படியே நடித்திருக்கிறார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவருடைய நடவடிக்கை முற்றிலுமாக மாறி இருக்கிறது. தேவையில்லாமல் இயக்குனரின் வேலைகளில் தலையிடுவது, இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று கூறுவது என குடைச்சல் கொடுத்திருக்கிறார்.

என்னதான் இயக்குனராக இருந்தாலும் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் போது நடிகர் என்ற நினைப்புதான் மனதில் இருக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணம் இல்லாமல் பிரபுதேவா தன் இஷ்டத்திற்கு இயக்குனரின் பல வேலைகளிலும் தலையிட்டு டென்ஷன் படுத்தி வருகிறாராம்.

அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் கேமரா மேன், உதவி இயக்குனர்கள், டெக்னீசியன்கள் உட்பட பலரிடமும் இவர் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். அதில் சிலரை கண்டபடி திட்டியும் பிரச்சனை செய்திருக்கிறார். இதனால் ஒட்டு மொத்த பட குழுவும் அவரால் எரிச்சல் அடைந்து போயிருக்கிறது.