கோடம்பாக்கத்தில் குஸ்தியை ஏற்படுத்தும் லவ் டுடே பிரதீப்.. நன்றி கடனுக்காக செய்த வேலையால் வந்த விபரீதம்

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனராக இருந்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்து மாஸ் ஹீரோக்களுக்கு மத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இவர் நடித்த முதல் படமான லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் இன்று உலக பேமஸ். லவ் டுடே படம் அவருக்கு ஒரு நல்ல பிரேக் மற்றும் டர்னிங் பாயிண்ட் கொடுத்து அவரை வானத்தில் பறக்க செய்தது. இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் அவரை புக் செய்ய பல போட்டி நிலவி வருகிறது.

லவ் டுடே படத்தை தயாரித்தது ஏஜிஎஸ் நிறுவனம். தன்னையும் நம்பி லவ் டுடே படத்தை தயாரிக்கும் முன் வந்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுக்கும் நன்றிக் கடனுக்காக இப்போது அந்த நிறுவனத்திற்கு 2 படங்களை எடுக்க கையெழுத்திட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ராக்போர்ட் முருகானந்திற்க்கும் படங்கள் பண்ணுவதாக கையெழுத்து போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் படம் பண்ண அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டு இருக்கிறார்.

இந்த சூழலில் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ், தனக்கும் ஒரு படம் பண்ணித் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் லைக்காவிற்கு அதிகாரப்பூர்வமாக வாக்குறுதி கொடுக்க முடியாத நிலையில், பிரதீப் ரங்கநாதன் இருக்கிறார்.

இருப்பினும் அவர்களது தயாரிப்பில் படம் பண்ணுவதாக கையெழுத்து இடவில்லை என்றாலும் வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். இப்படி சகட்டுமேனிக்க எல்லோருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால், காலதாமதம் ஏற்படும் போது நிச்சயம் அவரவர் பங்குக்கு கோடம்பாக்கத்தில் சண்டைக்கு வந்து தான் நிற்பார்கள்.