32 வயதில் பல கோடிக்கு அதிபதியான பிரதீப்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு

Pradeep Ranganathan : கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் லவ் டுடே படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து பிரதீப் கதாநாயகனாக நடித்திருந்த டிராகன் படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இது கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஐந்து கோடி சம்பளம் வாங்கி வந்த பிரதீப் இப்போது 12 கோடி வரை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தற்சமயம் பிரதீப் ரங்கநாதன் கைவசம் டியூட் மற்றும் லைக் ஆகிய படங்கள் இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள லைக் படம் செப்டம்பர் 18 வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களினால் இப்போது தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு

இந்த சூழலில் பிரதீப் இன்று தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது சினிமா வருமானம், சொத்துக்கள் மற்றும் சில முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் கிட்டத்தட்ட 22 கோடிக்கு மேல் பிரதீப்புக்கு சொத்து இருக்கிறதாம்.

மேலும் திறமை இருந்தால் கண்டிப்பாக முன்னேறலாம் என்பதற்கு பிரதீப் ரங்கநாதன் அடையாளமாக இருக்கிறார். ஆரம்பத்தில் அவரின் படத்தை தயாரிப்பதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கினாராம்.

அப்போது பல நிறுவனங்கள் அவரை மறுத்தனர். ஆனால் இப்போது அவரது டேட் கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு பிரதீப் கொண்டு வந்திருக்கிறார். அவர் இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று பிரதீப்புக்கு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.