பிரதீப் ரங்கநாதனுடம் ஜோடி போடும் மலையாள கிளி.. காம்போவே வேற லெவெலில் இருக்கே

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படம் மூலம் நடிகராகவும் பிரபலமானார். இவர், அடுத்து நடிக்கும் படத்தை ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் இருக்ககூடிய மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏ.ஜி.எஸ். இந்த நிறுவனத்தின் பேனரில் ஒரு படம் வெளியாகின்றது என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகின்றது. இந்நிலையில் இவர்களது தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் விஜய் நடித்திருந்த கோட்.

அந்த படமும் வசூல் வேட்டையை நடத்தியது. இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் டிராகன். இந்த படத்தையும் ஏ ஜி எஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனை ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த படம் லவ் டுடே

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தியேட்டரில் வசூல் மழை பொழிந்தது. படம் தியேட்டரில் மட்டும் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. மேலும் படத்தின் மொத்த பட்ஜெட்டே மிகவும் குறைவுதான் எனவும், ஆனால் படம் செம ஹிட் ஆகி தயாரிப்பு நிறுவனத்திற்கு மாபெரும் லாபத்தை ஈட்டித்தந்துள்ளது.

பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி போடும் மலையாள பைங்கிளி

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படமான டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் கதாநாயகி யார் என்ற கேள்வி தான் பல நாட்களாக இருந்தது.

இந்த படத்தில், நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளார். மிஷ்கின், கே.எஸ்.ரவிகுமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த காம்போவே நல்லா இருக்கே என்று ரசிகர்கள் இப்போதே படத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

Leave a Comment